பல்சுவை

கிழமைகளும் பிரதோஷத்தின் பெயர்களும்


ஞாயிற்றுக் கிழமை வரும் பிரதோஷம்ஆதிப் பிரதோஷம்’ என்றும், திங்கட்கிழமை வரும் பிரதோஷம்சோமவாரப் பிரதோஷம்’ என்றும், செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷம்மங்கள வாரப் பிரதோஷம்’ என்றும்,

புதன்கிழமை வரும் பிரதோஷம்புதவாரப் பிரதோஷம்’ என்றும், வியாழக்கிழமை வரும் பிரதோஷம்குருவாரப் பிரதோஷம்’ என்றும், வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷம்சுக்ர வாரப் பிரதோஷம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது எல்லாவற்றையும் விட சிறப்பு வாய்ந்தது சனிக் கிழமையில் வரும் பிரதோஷம்தான்.

இந்த பிரதோஷத்தைத்தான்மகா பிரதோஷம்’ என்று அழைக்கிறோம். சனிதான் அதிகமான தோஷத்தையும், துன்பங்களையும் கொடுக்கக்கூடியவர் என்று அனைவரும் நினைக்கிறார்கள். எனவே அந்தக் கிழமையில் பிரதோஷம் வந்துவிட்டால், சனியால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் விலகும் என்பது நம்பிக்கை.

0 comments:

Post a Comment

Powered by Blogger.