பல்சுவை

சூப்பர் பிரெய்ன் யோகா

தோப்புக்கரணம் போடுவதால் உடலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. தோப்புக்கரணம் போடுவதால் குண்டலினி சக்தி கிடைக்கிறது. இதனால் உடல் சுறுசுறுப்பு அடைகிறது.

இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொருவரும் பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி உள்ளனர். எனவே ஒவ்வொருவரும் தினமும் காலையிலும் மாலையிலும் தோப்புக்கரணம் போடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் உடலிலும் உள்ளத்திலும் நல்ல மாற்றம் ஏற்படுவது தெரிய வரும். நாம் தொடங்கிய இந்த தோப்புக்கரணம் பழக்கத்தை இன்று அடியோடு மறந்து விட்டோம்.

ஆனால் வெளிநாடுகளில் சூப்பர் பிரெய்ன் யோகா என்ற பெயரில் தோப்புக்கரணம் அழைக்கப்படுகிறது.உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்ல மாற்றத்தை தரும் இந்த தோப்புக்கரணத்தை வெளிநாட்டு டாக்டர்கள் மருத்துவ சிகிச்சையாகவும் பயன்படுத்துகிறார்கள்.

எனவே நாம் ஒவ்வொருவரும் தினமும் காலையில் பத்து முறையாவது தோப்புக்கரணம்போடுவோம். மாணவ, மாணவிகள் கட்டாயம் தோப்புக்கரணம் போட்டால் அவர்களது மூளை சுறுசுறுப்பாகி படிப்பது மனதில் நன்கு பதியும் மனதில் புதிய சிந்தனையும் பிறக்கும். எனவே இன்றே தோப்புக்கரணத்தை போட தயாராவோம்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.