தாயகம்

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் கோத்தபாய கடற்படை முகாம்

முல்லைத்தீவுவட்டுவாகல் பகுதியில் கோத்தபாய கடற்படை முகாம் அமைத்துள்ள 617 ஏக்கர் பரப்பு கொண்ட காணியை விடுவிக்குமாறு கோரி குறித்த பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.


இந்த போராட்டம் இன்று காலையில் ஆரம்பமானது.

தம்மால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் தமது காணி விடுவிப்பு தொடர்பாக எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லையென போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமது வாழ்வாதார வழிகள் அனைத்தையும் முடக்கியே இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்தொழிலிலில் ஈடுபட முடியாத வண்ணம் தமது கடற்கரை பாதைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இது தவிர தமது விவசாயக்காணிகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளதால், வாழ்வாதாரமின்றி தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கோத்தபாய கடற்படை முகாம் வாயில் முன்பாக கொட்டகை அமைத்து தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ள அந்த மக்கள் இன்றும் நாளையும் குறித்த பகுதியில் தொடர் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

அடுத்துவரும் 14 நாட்களுக்குள் தமது கோரிக்கைக்கு தீர்வு வழங்காவிட்டால், தொடர் போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.