ஒட்டிப் பிறவா இரட்டையர் நாம்
வலது புறம் அவள் இடது புறம் நான்
தினம் சேர்ந்தே பார்த்தோம் காட்சிகளை
நாள் தோறும் வாசித்தோம் நல்ல நூல்களை
சாகசமாக உந்துருளி ஓட்டும் போது ஏனோ
மனம் ஏற்க மறுத்து விட்டது சாலை விதிமுறைகளை
அப்போதும் இடையிடையே அண்ணன் மூளை
மனதுக்கு எச்சரித்தான் - ஐயையோ
அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது!
உந்துருளி பாரவூர்தியில் மோதும் போது
எம் அக்கா வாயவள் ‘அம்மா’ என அலரும் தருவாயில்
அகல விரிந்தோம் நாமிருவரும் அச்சத்தில்
அங்கிருந்த கம்பியொன்று வலது புறமிருந்த அவளை தாக்க
நாமிருவரும் இறுக மூடிக்கொண்டோம்
முழித்து பார்க்கையில் கண்ட காட்சி வேறு
விழித்து கொள்வது இதுவரை இப்படி கனக்கவில்லை
தேம்பி தேம்பி அழும் தாய்க்கு அருகிலிருந்து ஆறுதல் குரல்
"மகன் உயிர் பிளைத்ததே பெரிசு! வலக்கண்ணோடு போச்சு!"
என்ன! என்னவாயிற்று! என்னிலிருந்து தாரை தாரையாக கண்ணீர்
எப்போதும் இருகரம் கொண்டு கண்ணீரை துடைக்கும் எஜமான்
இடக்கரம் கொண்டு இடக்கன்னம் மட்டும் துடைக்கிறான்
வலக்கன்னத்தில் பெரிய வெள்ளைப் பொட்டலம்
உறுதியாகி விட்டது இனி நாம் இரட்டையர் அல்ல...
மீறாதீர் சாலை விதிமுறைகளை..
கலங்கடிக்காதீர் உறுப்புகளையும் உறவுகளையும் ...
இப்படிக்கு வலக்கண்ணை பிரிந்த
இடக்கண்
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment