தாயகம்

6300 கோடியுடன் நாடு திரும்பும் ரணில்

இலங்கையின் முக்கிய அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஜப்பான் 6300 கோடி ரூபாவை வழங்கவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு, அங்கு நடைபெறும் மாநாட்டிலும் பங்கேற்று உரையாற்றியுள்ளார்.

இந்நிலையில், நேற்றைய தினம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் இலங்கையின் முக்கிய அபிவிருத்திகளுக்கு 6300 கோடி ரூபாவினை வழங்குவது குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளது.

இலங்கையின் மூன்று அபிவிருத்தித் திட்டங்களுக்கே இந்த 6300 கோடி ரூபாய் வழங்க இணக்கம் காணப்பட்டதாகவும், இந்த நிதியுதவியில், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக ஜப்பான் 12.957 பில்லியன் யென்னை கடனாக வழங்கவுள்ளது.

இது தவிர, களுகங்கை நீர் விநியோக விரிவாக்கத் திட்டத்துக்கு 31.81 பில்லியன் யென் கடன் அடிப்படையில் வழங்கப்படவுள்ளதுடன், பொருளாதார சமூக அபிவிருத்தித் திட்டத்துக்கு 1 பில்லியன் யென் கொடையாக வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

Powered by Blogger.