உலகம்

21,000 பவுன்ட் எடையுள்ள 'MOAB' எனப்படும் சக்தி வாய்ந்த குண்டை ஆப்கானிஸ்தான் மீது வீசியுள்ளது அமெரிக்கா

அமெரிக்காவின் எம்.சி.-130 ரக போர் விமானம் மூலம் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்கா ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடந்த இடத்தில்தான் ஐஎஸ் தீவிரவாதிகள் சுரங்கம் அமைத்து தங்கி, மேற்கத்திய நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த வெடிகுண்டு மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இத்தாக்குதலில் மிகப்பெரிய உயிர்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தீவிரவாதிகள் மட்டுமல்லாது அப்பாவி மக்களும் இத்தாக்குதலில் உயிரிழந்திருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகளுக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தை எண்ணி பெருமைப்படுவதாகவும், ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகளுக்கு பாராட்டுத் தெரிவிப்பதாகவும் அதிபர் டொனல்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் ஆசின் மாவட்டத்தில் .எஸ் அமைப்பினர் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியான நங்கர்ஹார் பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

‛‛மதர் ஆப் ஆல் பாம்'' என்ற பெயரில் சுமார் 21,000 பவுன்ட் எடையுள்ள 'MOAB' எனப்படும் சக்தி வாய்ந்த குண்டை இரவு சுமார் 7.30 மணியளவில் ஆப்கானிஸ்தான் மீது வீசியுள்ளது அமெரிக்கா.

எனினும் இது அணுகுண்டு அல்ல என்று அமெரிக்க இராணுவ தலைமைச் செயலகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இத்தாக்குதலை நிகழ்த்திய அமெரிக்க இராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்க இராணுவத்தை எண்ணி பெருமை அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.