தாயகம்

கேப்பாப்புலவு இராணுவ முகாமிற்குள் இருந்து சென்ற சிங்கள மக்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

கேப்பாப்புலவு இராணுவ முகாமிற்குள் இருந்து சென்ற சிங்கள மக்கள் கேப்பாப்புலவில் காணிமீட்பிற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை இன்று(14) சந்தித்துள்ளனர்.

கேப்பாப்புலவில் தமது சொந்த நிலங்களை மீட்பதற்காக பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக இன்றைய புதுவருடப்பிறப்பை கறுப்பு நாளாக அனுஷ்டித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கேப்பாப்புலவு பிரதான இராணுவமுகாமிற்குள் இருந்து சென்ற சிங்கள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்தித்து அவர்களுடன் இணைந்து புதுவருட பிறப்பினை கொண்டாடியுள்ளனர்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.