யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில் தனியார் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் வீட்டில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் உடுவில் பகுதியில் நேற்று இரவு நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே இந்த பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதன்போது பெற்றோல் குண்டு பாரிய சத்தத்துடன் வெடித்துள்ளது.
இந்த சம்பவத்தில் வைத்தியரின் தந்தை வயிற்றுப் பகுதியில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் வைத்தியர் வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment