தாயகம்

மீதொட்டமுல்ல குப்பை மேட்டின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்த சம்பவம் தொடர்பில் பேச்சுவார்த்தை

மீதொட்டமுல்ல குப்பை மேட்டின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று (19) முற்பகல் விசேட பேச்சுவார்த்தையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இடர் முகாமைத்துவ அமைச்சில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் அரச அதிகாரிகள், முப்படை தளபதிகள் ,பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

சம்பவ இடத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ்.மீனவல தெரிவித்தார்.

மீதொட்டமுல்ல பகுதியில் இடம்பெற்ற சம்பவம் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது மூன்று நாட்களுக்கு ஒருதடவை இது தொடர்பிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதன் பிரகாரமே இன்றைய தினம் இந்த விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.