தாயகம்

காணாமல் போனோர் குறித்த அலுவலகத்துக்கான சட்டம் அமுலாக்கப்படும் சுமந்திரன்

மக்கள் விடுதலை முன்னணி பரிந்துரைத்துள்ள திருத்தம் சேர்க்கப்பட்டதன் பின்னர், காணாமல் போனோர் குறித்த அலுவலகத்துக்கான சட்டம் அமுலாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்..சுமந்திரன் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, வடக்கு கிழக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன்போது 3 வாரங்களில் அரசாங்க வெற்றிடங்களை அடையாளம் கண்டு, பட்டதாரிகளை நியமிக்க பிரதமர் உறுதியளித்தார்.

தற்போது வெற்றிடங்கள் அடையாளம் காணப்பட்டு, முகாமைத்துவ திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அமைச்சரவை அங்கீகாரத்தின் பின்னர் குறித்த வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் என்று, எம்..சுமந்திரன் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.