தாயகம்

நாட்டில் தற்போது சுமூகமான அமைதி மிக்கதொரு அரசியல் சூழ்நிலை

நாட்டில் தற்போது சுமூகமான அமைதி மிக்கதொரு அரசியல் சூழ்நிலை உருவாக்கபபட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 25 வருடகால அரசியல் வாழ்வை சித்தரிக்கும் வகையில் காத்ததன்குடியில் இன்று இடம்பெற்ற கிழக்கு வாசல் எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் இப்போது புதியதொரு அரசியல் கலாசாரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


தேர்தல்களில் மக்கள் மனச்சாட்சியுடன் வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

எனவே, நாடு எதிர்காலத்தில் முன்னோக்கிச் செல்வதற்கு அனைவரும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.