பாரத ரத்னா விருதையடுத்து, இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதத்தில் மத்திய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
கர்நாடக இசையுலகிலும் பின்னணிப் பாடகராகவும் தன்னிகரற்ற பங்களிப்பை வழங்கிய பாடகர் கே.ஜே. யேசுதாஸ் பத்ம விருதிற்கு தெரிவாகியிருந்தார்.
இந்நிலையில், இன்று இந்திய ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதன்போது பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளார்.
இவருடன் ஆன்மீகவாதி ஜக்கி வாசுதேவ், இசைக்கலைஞர் டி.கே.மூர்த்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மக்களவை முன்னாள் சபாநாயகர் சங்மா, பா.ஜ.க மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரும் பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்றுள்ளனர்.
கே.ஜே.யேசுதாஸ் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இதுவரை 7 முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். 1961 இல் இசை வாழ்வை ஆரம்பித்த அவருக்கு தற்போது 77 வயதாகிறது.
ஏற்கனவே 1975 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் 2002 இல் பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment