தாயகம்

31ஆவது வருடமான ஏவிளம்பி வருடம் நாளை வெள்ளிக்கிழமை பிறக்கிறது.

தமிழ் மக்களின் வருடச் சக்கரத்தின் 31ஆவது வருடமான ஏவிளம்பி வருடம் நாளை வெள்ளிக்கிழமை பிறக்கிறது.

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி நள்ளிரவு 12.48 இற்கு புதுவடம் பிறக்கின்றது.

திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரகாரம், நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 02.04 இற்குப் புதுவருடம் பிறக்கிறது.

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இன்று இரவு 8.48 தொடக்கம் நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 4.48 வரை விஷூ புண்ணிய காலமாகும்.

இன்று இரவு 10.04 தொடக்கம் நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 6.04 வரை விஷூ புண்ணிய காலமென திருக்கணித பஞ்சாங்கம் கூறுகிறது.

வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரகாரம், புத்தாண்டு தினத்தன்று மஞ்சள் நிற ஆடையோ, மஞ்சள் அல்லது ஊதா நிற கரை அமைந்த ஆடை அணிவது சிறந்ததாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.