தாயகம்

மூன்று குழந்தைகள் அகதிகளாக தமிழகத்துக்கு சென்றுள்ளனர்.

இலங்கையை சேர்ந்த தாய் மற்றும் மூன்று குழந்தைகள் அகதிகளாக தமிழகத்துக்கு சென்றுள்ளனர்.

இலங்கையில் இருந்து படகு மூலம் சென்ற அவர்களை படகோட்டிகள், ராமேஸ்வரம் கடற்பரப்பின் மூன்றாம் தீடையில் இறக்கி விட்டுள்ளனர்.

உதவி இன்றி தத்தளித்த அவர்களை, தமிழக கடலோர காவற்துறையினர் மீட்டுள்ளனர்.

அவர்களை ராமேஸ்வரம் காவற்துறையினர் விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் தமிழகத்தில் உள்ள அகதி முகாம் ஒன்றில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.