தாயகம்

ஆசிரியர் ஒருவர், மது போதையில் நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்து பெண் ஒருவருடன் தவறாக நடக்க முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது

கிளிநொச்சி பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், மது போதையில் நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்து பெண் ஒருவருடன் தவறாக நடக்க முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியின் தாயாருடன்  தவறான  முறையில் நடந்து கொள்ள முயன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யுத்தத்தின் போது தனது தந்தையை இழந்த மாணவி ஒருவரின் இளம் தாயாரிடமே இவ்வாறு குறித்த ஆசிரியர்  தவறாக நடக்க முற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில் மாணவியின் தாயார், மாணவி இருவரும்  வீட்டின் பினபுற வாயில் ஊடாக தப்பி வெளியேறி அருகில் உள்ள  வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர். 
 

வறிய நிலையில் உள்ள குறித்த பெண் வீட்டுத்திட்டம் மூலம் அமைக்கப்பட்ட வீட்டில் கதவுகள் பொருத்தப்பட்டிருந்த போதும் ஜன்னல்கள் முழுமையாக பொருத்தப்பட்டிருக்க வில்லை.

இதனால் குறித்த ஆசிரியர் ஜன்னல் கிறிலை கழற்றிவிட்டு அதன் வழியே வீட்டுக்குள் சென்றுள்ளார்.

இதேவேளை அன்றைய தினமே அதே பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணின் வீட்டுக்குள்ளும் உள்நுழையும் நோக்கில் உந்துருளியில் சென்று வீட்டு வாசலுக்குள் முன்னாள் நின்று நீண்ட நேரமாக ஒலி எழுப்பியவாறு நின்றதாகவும் குறித்த பெண் எழுத்த மூலம் பாடசாலை அதிபருக்கு அறிவித்துள்ளார்.

எனவே மேற்படி இரண்டு பெண்களும் எழுத்து மூலம் பாடசாலை அதிபருக்கு முறைபாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் பாடசாலை அதிபரிடம் தொடர்பு கொண்டு வினவிய போது

" தனக்கு அவ்வாறு ஒரு எழுத்து மூலமான முறைபாடு கிடைத்திருக்கிறது எனவும் தான் உரிய நடவடிக்கைக்காக வலயக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, பதில் வலயக் கல்விப் பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது தனது கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போது பாடசாலை விடுமுறை காலம் என்பதனால் வரும் வாரத்திற்கு பின்னர் விசாரணை குழு ஒன்றை அமைத்தது விசாரணை செய்து அதன் அறிக்கையை உரிய நடவடிக்கைகாக மாகாணத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.