உலகம்

அமெரிக்காவுக்கு சவால் விடுத்த வடகொரியா

அமெரிக்கா விரும்பும் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருப்பதாக வடகொரியாவின் அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.. செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், கடற்படை குழுவொன்றை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பி வைத்த அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்கா தாக்குதல்களை நடத்தினால், வடகொரியா அணுவாயுத தாக்குதல்களை நடத்த நேரிடும்.

எந்தவொரு அழுத்தங்களையும் எதிர்கொள்ள வடகொரியா தயார் நிலையில் உள்ளது. அத்துடன், எதிரியின் நடமாட்டங்களை தொடர்ச்சியாக வடகொரியா கண்காணித்து வருகின்றது என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.