11 வயது சிறுமியொருவரை தூக்கிச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
20 வயதுடைய குறித்த சந்தேகநபரை இன்று காலை கைது செய்ததாக அனுராதபுரம் காவற்துறை தெரிவித்துள்ளது.
வீட்டில் இருந்த காய்ந்த மிளகாயை அரைத்துக்கொள்வதற்காக குறித்த சிறுமியின் மாமாவான அந்த நபருடன் உந்துருளியில் சிறுமி சென்றுள்ளார்.
சிறிது தூரம் சென்ற பிறகு சந்தேகநபர் உந்துருளியை மாற்று பாதைக்கு திருப்பியுள்ளார்.
மிளகாய் அரைக்கும் ஆலைக்கு செல்வது இந்த பாதையிலா? என அந்த சிறுமி வினவியுள்ள நிலையில் , செங்கல் வெட்டும் இடம்மொன்றிற்கு செல்வதாக கூறி உந்துருளியை செலுத்தியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் உந்துருளியை நிறுத்தி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகதத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ள போது , குறித்த சிறுமி அவரிடம் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
பின்னர் , சிறுமி அவரின் தாயுடன் காவற்துறைக்கு சென்று மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான 20 வயதுடைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் , தனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் தாய் காவற்துறையில் தெரிவித்துள்ளார்.
Home / தாயகம்
/ 11 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment