தாயகம்

நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சுமார் 5 இலட்சம் வரையில் உலக வங்கிக்கு கடனாக செலுத்த வேண்டிய நிலையில்

இன்றைய நிலையில் 9 லட்சம் கோடிகளை இலங்கை கடனாக கொண்டுள்ளது என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றின் மூலமாகவே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்நிலையில், இலங்கை நாடும், நாட்டு மக்களும் 9 லட்சம் கோடிகளை கடனாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சுமார் 5 இலட்சம் வரையில் உலக வங்கிக்கு கடனாக செலுத்த வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர்.

9 இலட்சம் கோடிகள் என்பது சாதாரண தொகை அல்ல. இதனை நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து செலுத்துவதற்கு முயல வேண்டும்.

அதனால் நாட்டில் திருடர்களை இல்லாமல் செய்ய அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். யார் தவறு செய்தாலும் முறைப்பாடு செய்ய வேண்டும்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் நாட்டின் நீதி முறையாக செயற்படுகின்றது. எதிர்காலத்தில் ஒரு நல்ல நாடாக இலங்கை மாறும் என ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.