கடுவெல, கொத்தலாவல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் கடுவெல – மாலபே வீதியின் கொத்தலாவல பாடசாலை வளைவு பகுதியில் முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி குறிப்பிட்டார்.
கடுவெல – கொத்தலாவல பகுதியைச் சேர்ந்த 42 வயதான கொட்டுதரகே ருவன் குமார என அழைக்கப்படும் பிடலி துஷார என்பவரும் கடுவெல போமிரிய கீழ்ப்பிரிவைச் சேர்ந்த 49 வயதான கொத்தலாவலகே தொன் பிரியவங்ச என்பவருமே உயிரிழந்துள்ளதாக அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இருவரும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
இந்த இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக நுகேகொடை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ், விசேட பொலிஸ் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment