உலகம்

ஆப்கானிஸ்தானில் 140 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரான மசார்--ஷெரீப் நகருக்கு அருகேயுள்ள இராணுவத்தளத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலின் போது இராணுவ வீரர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்ததாகவும் மற்றவர்கள் உணவருந்திக் கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 10 தலிபான்கள் ஈடுபட்டதாக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சின் செய்தி தொடர்பாளர் தவ்லத் வாசிரி குறிப்பிட்டுள்ளார்.

அந்நாட்டு இராணுவ வீரர்களின் உடையை அணிந்து தலிபான்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.