பணிப்பெண்களாக சென்று தாக்குதல்களுக்கு உள்ளான 12 பேரின் சடலம் சவுதி அரேபியாவின் ஒலேயா வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதாக, சுதந்திரத்துக்கான பெண்கள் தேசிய இயக்கத்தின் அமைப்பாளர் ஹேமமாலி அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்னமும் அதிகாரிகளின் அவதானம் செலுத்தப்படவில்லை எனவும், பல்வேறு துன்புறுத்தல்களுக்குள்ளான இலங்கை பெண்கள் தினமும் ஒலேய்ரா தடுப்பு மத்திய நிலையத்திற்கு அழைத்து வரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதென அபேரத்ன தெரிவித்துள்ளார்.
நான்கு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த நாமலி பெரேரா என்ற பெண்ணின் சடலம் இந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 5ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment