தாயகம்

கிளிநொச்சி - புதுமுறிப்பு பகுதியில் விபத்தில் ஒருவர் பலி

கிளிநொச்சி - புதுமுறிப்பு பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரணித்தார்.

அரச பேருந்து ஒன்றும் உந்துருளியொன்றுமே விபத்துக்கு உள்ளாகின.

இதனை அடுத்து குறித்த பேருந்து வீதியில் சேவையில் ஈடுபடுத்துவதற்கான தகைமைகள் குறித்து கேள்வியெழுப்பி, பிரதேச மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த பேருந்து ஏற்கனவே பல விபத்துக்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் இந்த விபத்துக்களினால் ஏற்கனவே ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.