தாயகம்

கோஷங்கள் மாத்திரம் தமிழ் மக்களுக்கு விமோசனத்தைத் தரப்போவதில்லை சதாசிவம் வியாழேந்திரன்

வெறுமனே தமிழ்த் தேசியம், உரிமை என்ற கோஷங்கள் மாத்திரம் தமிழ் மக்களுக்கு விமோசனத்தைத் தரப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாம் தீர்வுத் திட்டத்தை நோக்கிப் பயணிக்கின்றோமானால் அதற்கு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் வாழும் பிரதேசங்களும் அபிவிருத்தியடையும் நோக்கில் சமாந்திரமாக பயணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தியில் பின்தங்கினால் சிறுபான்மை சமூகத்தின் இருப்பென்பது கேள்விக்குறியாகி விடும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.