மட்டக்களப்பு – கல்குடா பகுதியில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்கள் இருவரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தனர்.
கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது, கடந்த மாதம் 21 ஆம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் நியூஸ்பெஸ்ட் பிராந்திய செய்தியாளர் நல்லதம்பி நித்தியானந்தன், சுதந்திர ஊடகவியலாளரும் வீரகேசரி பத்திரிகையின் பிரதேச ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சசிகரன் ஆகியோரே தாக்கப்பட்டிருந்தனர்.
தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்ற இடத்திலிருந்த சிலர் ஊடகவியலாளர்களைத் தாக்கியுள்ளதுடன், சுமார் 6 கிலோமீற்றர் வரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து அவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்திருந்தனர்.
இந்நிலையில், தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்கள் இருவரும் கடந்த 22 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்தில் முறைப்பாடொன்றை முன்வைத்திருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்திற்கு ஊடகவியலாளர்கள் இருவரும் இன்று அழைக்கப்பட்டிருந்தனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment