உலகம்

சிரியா விஷ வாயு தாக்குதலை சகித்துக்கொள்ள முடியாது

சிரியாவில் நிகழ்த்தப்பட்ட விஷ வாயு வெடிகுண்டுத் தாக்குதலை எந்த நிலையிலும் சகித்துக்கொள்ள முடியாது எனவும், சிரியா மீதான தன்னுடைய பார்வை மாறியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் அரசுக்கு எதிராக செயற்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளைக் குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் நேற்று முந்தினம் இரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது.

இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்குன் நகரில், போராளிகள் பரவலாக வாழும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த விஷ வாயு தாக்குதலில் 20 குழந்தைகள், பெண்கள் உட்பட 72 பேர் உயிரிழந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குளோரின் வி‌ஷ வாயுவை பீப்பாயில் அடைத்து சிரிய இராணுவ ஹெலிகாப்டர் மூலம் வீசியதாக, இந்த தாக்குதல் தொடர்பாக .நா. சபை பிரதிநிதிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.