தாயகம்

ஐ.நா மீது 2000 பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள்

கடந்த 12 வருடங்களில் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த படைத் துருப்பினர்கள் தொடர்பில், சுமார் 2000 பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அசோஸியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

2004 முதல் 2016 வரையான காலப்பகுதியில் ஹெய்டி இராச்சியத்தில் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த துருப்பினர்களுக்கு எதிராக 150 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்ததாக அசோஸியேட்டட் பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளை மேற்கோள்காட்டி அசோஸியேட்டட் பிரஸ் சர்வதேச செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம் பிரேஸில், பங்களாதேஷ், ஜோர்தான், நைஜீரியா, பாகிஸ்தான், உருகுவே மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்ட துருப்பினர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை விதிப்பதற்கான சட்ட ரீதியான அதிகாரம் ஐக்கிய நாடுகள் சபைக்கு இல்லையெனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.