பல்சுவை

காலம் மாறிவிட்டது பெண்கள் கவனத்திற்கு

காலம் மாறிவிட்டது.
இன்றைய காலக்கட்டத்தில் வேலையின் பொருட்டு பெண்கள் தனியாக பல இடங்களுக்கு செல்ல வேண்டியது உள்ளது. அந்நேரங்களில் அவர்களின் பாதுகாப்பு மிக அவசியம்.
இரவு நேரங்களில் நேரமாகிவிட்டால் வீட்டிற்கு செல்வதற்கு ஆட்டோவினை நேரடியாக ஆட்டோக்கள் நிற்கும் இடத்திலிருந்து ஏறவேண்டும்.
காரில் செல்வதாக இருந்தால் டாக்சி புக் செய்யும் நிறுவனத்தில் புக் செய்து பின்னர் அந்த கார் டிரைவரின் முன்பாகவே வண்டி எண், எங்கு உள்ளீர்கள் என்பதை தெரிவிக்கவேண்டும்.
இதன் மூலம் நீங்கள் பாதுகாப்பான சூழலில் உள்ளீர்கள் என்பதை அந்த டிரைவருக்கு ஏற்படுத்தும்.
தனியாக நடந்து செல்லும் போது யாரேனும் பின் தொடர்வதை போன்று தோன்றினால் பாதையிலிருந்து சற்று விலகி செல்லவேண்டும். அப்போதும் பின் தொடர்ந்தால் எண் 100-ல் பொலிசை அழைக்க வேண்டும்.
மேலும், அங்கிருந்து ஆட்கள் அதிகமுள்ள பகுதிக்கு விரைந்து செல்லவேண்டும்.
புதிய இடத்திற்கு செல்லும் போது கூகுள் மேப் மூலமாக பாதையினை கண்டறியலாம். ஸ்கீரீன் ஸாட் எடுத்து வைத்துகொள்வதால் போன் சிக்னல் கிடைக்காத போதும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.
முடிந்தளவிற்கு அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் ஒருவரை தனியாக சென்று சந்திப்பதை தவிர்க்க வேண்டும்.
கட்டாயம் செல்ல வேண்டி இருந்தால் வேலை பற்றிய பேச்சினை மட்டுமே தொடர வேண்டும். அங்கு அவர் தரும் எதையும் பருகாமல் இருப்பது நலம்.
ஓட்டல் அறைகளில் தங்க நேர்ந்தால் அறைக்குள் சென்றவுடன் உங்கள் மொபைல் போனில் இருந்து யாருக்காவது அழைக்கவேண்டும். அப்போது போனில் வித்தியாசமாக சத்தம் கேட்டால் அந்த அறையில் கேமரா உள்ளது.
மேலும் அறையினை சுத்தம் செய்ய வருபவர்களிடம் நீங்கள் இருக்கும் போது மட்டும் வந்தால் போதும் எனக்கூறிவிடவேண்டும்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.