நாட்டின் கடல் எல்லைக்குள் மீன் வளம் அதிகமாகக் காணப்படும் இடங்களை அடையாளம் காண்பதற்குரிய புதிய வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மீனவர் சமூகத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக இத்தமல்கொட தெரிவித்தார்.
இலங்கை கடல் எல்லைக்குள் காணப்படும் மீன் வளங்களை அடையாளங்கண்டு, அது தொடர்பான தகவல்களை மீனவர்களுக்கு அறியத்தரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய, கடலில் மீன்வளம் உள்ள இடங்களை முன்கூட்டியே அறிந்துகொள்வதன் ஊடாக அதிகளவு மீன்களைப் பிடிப்பதற்கும், அதன் மூலம் அதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் வழியேற்படுமென நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கூறினார்.
கரைப் பகுதியிலிருந்து அகலாங்கு மற்றும் நெட்டாங்கு ரீதியாக கடலில் மீன்கள் இருக்கும் இடம் தொடர்பில் துல்லியமான தகவல்களை மீனவர்களுக்கு வழங்கும் நடவடிக்கையை நாரா நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment