தாயகம்

ரணில் இன்று ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்

இன்று அதிகாலை 1.10 அளவில் அவர் உள்ளிட்ட குழுவினர் ஜப்பான் சென்றதாக, எமது வானூர்தி நிலைய செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் சென்றுள்ள பிரதமர், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நாளைய தினம் அவர், ஜப்பான் பிரதமரை சந்திக்கிவுள்ளார்,

அத்துடன், பல்வேறு தரப்பினரை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதியில் இந்தியா செல்லவுள்ளார்.

இலங்கை இந்திய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உடன்படிக்கையான எட்கா ஒப்பந்தம் தொடர்பான இறுதி தீர்மானம் ஒன்றை எடுக்கும் நோக்கிலேயே பிரதமரின் இந்திய விஜயம் அமையவுள்ளது.

இதன்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உயர் மட்ட அரசியல் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.