சினிமா

அஜித்தின் விவேகம் தயாரிப்பாளர் போடும் மாஸ்டர் பிளான்

அஜித் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் விவேகம். படத்தின் பாதி படப்பிடிப்பு பல்கேரியாவில் மொத்த படக்குழு இடம்பெற நடந்து வருகிறது.

படத்தின் படப்பிடிப்பு எப்போது முடியும் என்றே தெரியவில்லை. இந்நிலையில் தான் தயாரிக்கும் படத்தின் வேலைகளில் என்ன தான் நடக்கிறது என்று பார்க்க சத்யஜோதி தியாகராஜன் பல்கேரியாவிலேயே தங்கியிருக்கிறாராம்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

அதோடு படத்தின் பட்ஜெட் நினைத்ததை விட பல மடங்கு எகிறிவிட்டதாம். ஏன் இப்படி நடந்தது என்பதை அலசி ஆராய்ந்த தியாகராஜன், அதற்கான சில திட்டங்களை வகுத்துக் கொடுத்து படப்பிடிப்பை விரைவில் முடிக்க வழி செய்திருக்கிறாராம்.

இந்த வேலைகளால் தியாகராஜன் தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு கூட வரவில்லையாம். இத்தனைக்கும் அவர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டிருந்தார்.

சிவா இயக்கும் விவேகம் படத்தின் சில புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.