தாயகம்

நாளை நண்பகலில் ஏற்படவுள்ள மாற்றம்!

இலங்கையை அண்டிய அட்சரேகையில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்க உள்ளதால் பல்வேறு மாற்றங்கள் ஏற்படவுள்ளது.

இதன்படி நாளை மதியம் 12.12 மணியளவில் சில பிரதேசங்களில் மாற்றங்களை காண முடியும் என வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது.

இலங்கை அண்டிய அட்சரேகையில் எதிர்வரும் 15ஆம் திகதி வரை சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதன்போது கொச்சிக்கடை, அம்பேபுஸ்ஸ, பேராதனை, துனுவில, மாதுரு ஓயா, புலுபிடிய மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, சூரியன் உச்சம் கொடுக்கும் நாட்களில் கடுமையான வெப்பம் நிலவும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.