தாயகம்

ஆசிரியர் ஒருவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

மிகிந்தலை - குருந்தன்குளம் பிரதேசத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னால் கடிதமொன்றை எழுதி வைத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தனது தொழில் தொடர்பில் தான் அதிருப்தியடைந்துள்ளதன் காரணமாக இவ்வாறு தற்கொலை செய்துக்கொள்வதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடைய , எப்பாவெல சித்தார்த்த மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் ஆசிரியராவார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.