தீர்க்க தரிசனம் மிக்க எமது செயலாளர் நாயகத்தின் சிந்தனைக்கு அமைவாக மக்களுக்கான சேவைகளை எந்த இடர்பாடுகள் தடைகளுக்கு மத்தியிலும் முன்னெடுப்பதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம் என கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கா.வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தெரிவித்தார்.
அனலைதீவிற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த மாவட்ட நிர்வாகச் செயலாளர் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மக்களை சந்தித்து கலந்துரையாடும் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அனலைதீவை பொருத்தவரையில் இதன் அபிவிருத்தியை கருத்தில் கொண்டதாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு அமைவாக பல்வேறு அபிவிருத்திகளை நாம் முன்னெடுத்திருந்தோம்.
குறிப்பாக வீதிப்புனரமைப்பு உள்ளிட்ட அபிவிருத்திகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம்.
இவ்வருட இறுதிக்குள் உள்ளுராட்சி தேர்தல் நடைபெறுவதாக அறியப்படும் நிலையில் மக்கள் மக்களுக்காய் உழைப்பவர்களையே இனம் கண்டு தெரிவு செய்வதனூடாக இவற்றை செயற்படுத்த முடியும் அதை விடுத்து வெற்றுக் கோஷங்களும் உணர்ச்சி பேச்சுக்களும் நடைமுறைப்படுத்த முடியாத பொய் வாக்குறுதிகளையும் நம்பியதால் இன்று மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என ஜெகன் மேலும்தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment