தாயகம்

மின்னல் ரங்காவை குள்ளநரியென சாடும் சிரேஸ்ட ஊடகவியலாளர் அருண்!

இன்றைய ஊடகங்களின் நிலை குறித்து கவண் திரைப்படம் பேசுவது உண்மையா என்ற வாதப் பிரதிவாதங்கள் தற்போது இணைய ஊடகங்களில் பரவலாக பேசப்படுகின்றன.

இலங்கையிலும் சில ஊடகங்கள் நடந்துகொள்ளும் விதமும், அவற்றை நடத்துபவர்கள் ஊடகங்களை முற்றுமுழுதாக மக்கள் நலன்சார் இல்லாது தமது அரசியலுக்காகப் பயன்படுத்துவதையும் அவதானிக்க முடிகிறது.


கவண் படம் தமிழக தொலைக்காட்சியின் நீயா? நானா? நிகழ்ச்சியை நாடுகிறதா என்ற கேள்வியுடன்  சிரேஸ்ட ஊடகவியலாளரான எஸ்.எழிவேந்தன் தனது முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார். 



நீயா? நானா? நிகழ்ச்சி மட்டுமா இலங்கையின் சக்தி தொலைக்காட்சியில் நடத்தப்படும் மின்னல் நிகழ்ச்சி குறித்து என்ன சொல்வது என்ற கேள்வியை சிரேஸ்ட ஊடகவியலாளர் அருண் ஆரோக்கியநாதன் முன்வைத்துள்ளார்.

அத்துடன்,  சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சி தொகுப்பாளரும், அந்த நிறுவனத்தின் பணிபாளர்களில் ஒருவரும், முன்னாள் அரசியல்வாதியுமான ஜே.ஶ்ரீரங்கா குறித்து விமர்சனமொன்றையும் முன்வைத்துள்ளார்.


மின்னல் நிகழ்ச்சி ஊடாக காழ்ப்புணர்ச்சி விமர்சனங்களை முன்வைத்து மலையகத்தில் அரசியலில் ஈடுபட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் மின்னல் ரங்கா பதவி பெற்றிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

அதன்பின்னர் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததும், மின்னல் ரங்கா தனித்து களமிறக்கிய குழு மலையகத்தில் படுதோல்வியடைந்ததும், அவரது அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியது.

இதன்பின்னர் தனது அரசியல் களத்தை வன்னி பிராந்தியத்தில் வியாபிக்க மின்னல் ரங்கா முயற்சித்த போதிலும் அந்த முயற்சியும் தோல்வி கண்டது.

இதனையடுத்து மின்னல் ரங்கா தற்போது மட்டக்களப்பு பிராந்தியத்தில் உலா வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், தற்போது தலைதூக்கியுள்ள வேலையற்ற பட்டதாரிகள் விவகாரத்தை மின்னல் ரங்கா கையாண்டு தனது அரசியல் இருப்பதைத் தக்கவைத்துக் கொள்வதைக் காண முடிகிறது.

இதனையே சிரேஸ்ட ஊடகவியலாளர் அருண் ஆரோக்கியநாதன் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

ஊடகவியலாளர் அருண் ஆரோக்கிநாதனின் நடுநிலையான விமர்சனம், மின்னல் ரங்காவின் முகத்திரையை பகிரங்கமாக கிழிப்பதற்கு வழிசெய்துள்ளது.


 - மட்டு நகர் தமிழன்

0 comments:

Post a Comment

Powered by Blogger.