தாயகம்

5 வருடங்களாக தூண்களில் கட்டிவைக்கப்பட்டிருந்த இரண்டு பிள்ளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்

5 வருடங்களாக மரங்கள் பாறைகள் மற்றும் தூண்களில் கட்டிவைக்கப்பட்டிருந்த இரண்டு பிள்ளைகள் கதிர்காமம் நாகாஹவீதிய கிரமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதி தேரர் ஒருவருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

காவற்துறை அதிகாரிகளுடன், அங்கு சென்ற தேரர், அதன்போது தூண்களில் கட்டப்பட்டிருந்த அந்த பிள்ளைகள் இருவரையும் மீட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ளவர்கள் 7 வயதான ஆண் பிள்ளையொன்றும், 17 வயதான பெண் பிள்ளையொருவரும் என தெரியவந்துள்ளது.

அவர்களால் பேசவும் முடியாது என பிரதேசவாசிகள் கூறியுள்ளனர்.

குறித்த பிள்ளைகளின் தாய் மேலும் ஒரு விஷேட தேவையுடைய பிள்ளையை கதிர்கமாம் ஆலயத்தில் யாசகம் பெற அமர்த்தியுள்ளதாக இதன்போது தெரியவந்துள்ளது.

பல காலங்களாக இவ்வாறு அந்த பிள்ளைகள் கட்டிவைக்கப்பட்டிருந்தாகவும், அவர்களின் தந்தை உயிரிழந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.