தாயகம்

10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை போதுமானதல்ல ஆசிரியர் சங்கம்

ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை போதுமானதல்ல என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு அடுத்த மாதம் முதல் 6 ஆயிரம் ரூபாவிலிருந்து 10 ஆயிரம் ருபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பாக சுற்றுநிரூபம் ஒன்றை உடனடியாக வெளியிட்டு, நிலுவைக் கொடுப்பவுடன் அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொடுப்பனவை அதிகரிப்பது மட்டும் போதுமானதல்ல,

அவர்களை ஆசிரியர் சேவையின் 3 ஆம் தரத்துக்கு உள்வாங்க வேண்டும்.

அப்போது அவர்களுக்கு நிர்ந்தர கொடுப்பனவு வழங்கப்படும்.

அவர்களின் சேவைக்காலம் கருத்திற்கொள்ளப்படும்.

இந்த நாட்டில் ஏனைய தொழில்களில் இவ்வளவு குறைந்த சம்பளம் வழங்கப்படுவதில்லை.

இந்த நிலையில், ஆசிரிய உதவியாளர்களுக்கான கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரித்தமை போதுமானதல்ல என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.