சினிமா

எனக்கு ஃபேஸ்புக் செட் ஆகலை பிரதர்! - என்னாச்சு விஜய் சேதுபதிக்கு?

விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் பரபரவென உயரம் தொட்டவர்.  தற்போது விஜய் சேதுபதிக்கு ஷூட்டிங் இல்லாத நாட்களே இல்லை. ரொம்ப பிஸி. "நாளைக்கு மலேசியா போறேன் பிரதர். திரும்பி வர கொஞ்ச லேட் ஆகும்." என்றவரிடம் சில கேள்விகளை கேட்டோம்.


“சினிமாவுல நீங்க எந்தப் பாதையை நோக்கி போறீங்க?"

"நான் எதை நோக்கியும் போகலைங்க. இருப்பதைச் சுவாரஸ்யமா செய்யணும்னுதான் டிரை பண்ணுறேன். இருக்கற இடத்தை விட்டுட்டு இன்னொரு இடத்தை நோக்கிப் போகணும்னு நினைக்கற ஆள் நான் கிடையாது. இந்த பால் அடிச்சா அங்க இருந்து இங்க வந்திடலாம். அந்தக் கணக்கு எல்லாம் போடலை. இருக்கற பந்தை ஒழுங்கா அடிக்கணும். நடிக்கற படங்கள் என்னையும், ஆடியன்ஸையும் ரொம்ப சுவாரஸ்யமா வைச்சுக்கணும் நினைக்கறேன். மத்தபடி, நான் நடிச்சு தள்ளணும், என்னைப் பற்றி வித்தியாசமாகச் சொல்லணும். ஒரு பெரிய ரேஞ்ச்ல என்னைக் காட்டிக்கணும்னு அப்படி எந்த எண்ணமும் எனக்கு இல்லை. அப்படிப்பட்ட அடையாளமும் எனக்கு வேண்டாம். தட்ஸ் இட்." 

“நீங்க ரொம்ப யதார்த்தமாக நடிக்கறீங்கனு எல்லாரும் பாராட்டுறாங்க. உங்க நடிப்பு எப்படி எல்லாம் வளர்ச்சி அடைஞ்சிருக்கு?”

“நான் நடிக்க வந்த சமயத்துல... அதாவது ஹீரோவான புதுசுல, கொடுத்த டயலாக்கை எல்லாம் மனப்பாடம் பண்ணி அப்படியே சீன்ல சொல்லிடணும்னு நினைச்சேன். அதுக்கு அடுத்த கட்டம் வரும்போது சீன்ல பெஸ்ட்டா  பண்ணணும்னு தோணுச்சு. அதுக்கும் அடுத்த கட்டம், எல்லாரும் பாராட்டுற மாதிரி நடிக்கணும்னு நினைச்சேன். இப்ப, எனக்கு நான் நடிக்கறது உண்மையா இருக்கணும். It should touch myself. எனக்கு நான் நடிச்சது தப்புனு பட்டுச்சுன்னா, நானே டைரக்டர்கிட்ட போய் ஒன்ஸ்மோர் கேட்பேன். கேட்குறேன். இப்படித்தான் என் நடிப்பைத் தகுதிப்படுத்திகிட்டேன்." 

"நீங்க ஃபேஸ்புக், ட்விட்டர்ல இருக்கீங்களா?" 

"நான் ட்விட்டர்ல கிடையாது. முதல்ல ஃபேஸ்புக்ல இருந்தேன். இப்ப இல்ல. ஒரு காமெடி, ஒரு சந்தோஷமான செய்தியை பார்த்தோம்னா... அதுக்கு அடுத்து ஒரு கொடூரமான சம்பவமோ, போட்டோவோ வந்துடுது. ஒரே மனநிலையை ஃபேஸ்புக் தக்க வைக்க மாட்டேங்குது. அதோட டிசைனே அப்படித்தான்னாலும் அது எனக்கு ஒத்துவரலை. அதுனால ஃபேஸ்புக்ல இருந்து எப்பவோ வெளியே வந்துட்டேன். என் ஃபேஸ்புக் பேஜ் மட்டும் இருக்கு. என் நண்பர் ஒருத்தர் அதை பாத்துகிறார்." 

"சரி, நீங்க படம் எடுத்தால் என்ன ஜானர்ல எடுப்பீங்க?" 

சிரிக்கிறார் "இப்ப எந்த ஐடியாவுமே இல்லையே பிரதர். ஆசை மட்டும்தான் இருக்கு. சினிமாவுக்கு வந்து நீங்க நடிகர் ஆகிட்டீங்கன்னா... உங்களுக்குமே இந்த ஆசை வரக்கூடியதுதான்." 

"2017-ல என்ன திட்டம் வச்சு இருக்கீங்க?" 

"இந்த வருஷம் என் படங்கள் மினிமம் அஞ்சாவது வரும்னு தோணுது. 'கவண்' ரிலீஸ் ஆகுது. ‘புரியாத புதிர்’ ரிலீஸ் லிஸ்ட்ல இருக்கு.  'இடம் பொருள் ஏவல்' ரிலீஸ் ஆகணும்னு ஆசைப்படுறேன்.  'விக்ரம் வேதா'னு படம் சீக்கரம் வெளியாகும். நல்லது நடந்தால் சரிதான்." என  தம்ஸ்அப் காட்டுகிறார் விஜய் சேதுபதி.

0 comments:

Post a Comment

Powered by Blogger.