உலகம்

இப்படி ஒரு ஈனச் செயலை அண்ணன் படத்தின் முன் செய்திருக்க மாட்டான்! சீமான்



சமூக வலைதளங்களில் அண்மையில் நாம் தமிழர் கட்சி ஆட்கள் செய்யும் லீலைகள் என வீடியோ ஒன்று வைரலாக பரவியது.

இது குறித்து சீமான் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

தேர்தல் நேரத்தில் இப்படியொரு தேவையில்லாத பொய்யான காட்சியை வெளியிட்டுள்ளனர்.

அதை வேண்டுமென்றே பரப்புகின்றனர். அதில் இருப்பது நாம் தமிழர் கட்சி ஆள் என எப்படி சொல்கிறார்கள்?

இப்படியொரு ஈனச் செயலைச் செய்பவன், மறைவாக இருந்து கொண்டு செய்யலாம். பிரபாகரன் படத்துக்கு முன்னால் நின்று செய்வதற்கு, சில நோக்கம் இருக்கிறது.

அதை படம்பிடிக்க வேண்டுமென்று பிரபாகரன் புகைப்படம் வைத்து இப்படி ஒரு காட்சியை வெளியிட்டுள்ளனர்.

நாங்கள் எங்கெல்லாம் எழுச்சியோடு வேகமாக வருகிறோம் என்பதை உணர்ந்து, தேர்தல் நேரத்தில் இப்படியொரு காட்சியை வெளியிட்டுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவன் இப்படியொரு கேடுகெட்ட செயலைச் செய்ய மாட்டான். இப்படிப்பட்ட நபரால் எங்கள் கட்சிக்குள் தாக்குப் பிடிக்க முடியாது.

பேருந்து கண்ணாடியை உடைத்த ஒருவரை, கட்சியை விட்டு நீக்கியவன் நான். இதற்கும் நாம் தமிழருக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். எங்கள் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லையென்றால், கோபப்பட வேண்டிய தேவையில்லை.

உண்மை என்றால் கோபப்படும் உரிமை எங்களுக்கு இல்லை. இதற்கு எதிராக நாங்கள் எந்த விளைவையும் காட்டவில்லை.

இன்னும் கீழே சென்று கூட எங்களை வீழ்த்துவார்கள். இதை பரப்ப வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளைக் கடந்து செல்கிறோம்.

கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க முடியாது. அதையும் எதிர்கொண்டுதான் கடந்து செல்ல வேண்டியுள்ளது" என்றார் பலத்த சிரிப்போடு.

0 comments:

Post a Comment

Powered by Blogger.